வால்பாறை கருமலை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் தேர் பவனி- திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு


வால்பாறை கருமலை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் தேர் பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை கருமலை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் தேர் பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

வேளாங்கண்ணி மாதா ஆலயம்

வால்பாறை அருகே கருமலையில் வேளாங்கண்ணி மாதா ஆலயம் உள்ளது. அந்த ஆலயத்தின் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தேர்த்திருவிழா நடந்தது. கருமலை வேளாங்கண்ணி மாதா திருத்தலத்தில் ஆலய பங்கு குரு மரியஜோசப், உதவி பங்கு குரு இம்மானுவேல் முன்னிலையில் கோவை மறைமாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் கத்தோலிக்க சமூக பணி இயக்குனர் குரு அருண், புனித சூசையப்பர் ஆலய பங்கு குரு ஜார்ஜ் சகாயராஜ், அய்யர்பாடி புனித வனத்துச்சின்னப்பர் ஆலய பங்கு குரு ஆனந்த குமார், முடீஸ் புனித அந்தோனியார் ஆலய பங்கு குரு மரிய அந்தோணிசாமி ஆகியோர் இணைந்து கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றினார்கள்.

தேர் பவனி

திருப்பலிக்கு பின் வெள்ளமலை, கருமலை ஆகிய எஸ்டேட் பகுதியில் இருந்து அன்னை வேளாங்கண்ணி மாதா சொரூபம் தாங்கிய தேர் மந்தரிக்கப்பட்டு ஆலயத்திற்கு பவனியாக எடுத்து வரப்பட்டது. தேர்பவனியில் கலந்து கொண்ட வேளாங்கண்ணி மாதா பக்தர்கள் மரியே வாழ்க என்று முழங்கினார்கள். திருவிழா சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி கோவை மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபை ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்பின் விருந்து வழங்கப்பட்டது. தேர் திருவிழா ஏற்பாடுகளை ஆலய பங்கு குரு மரியஜோசப் தலைமையில் வால்பாறை திரு இருதய ஆலய பங்கு மக்கள் மற்றும் கருமலை வேளாங்கண்ணி மாதா திருத்தல பங்கு மக்கள் செய்திருந்தனர்.


Next Story