வால்பாறை நகராட்சி கூட்டம்


வால்பாறை நகராட்சி கூட்டம்
x
தினத்தந்தி 2 Aug 2023 2:30 AM IST (Updated: 2 Aug 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை நகராட்சி கூட்டம்

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் நகராட்சி மன்ற கூட்டம் தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமையிலும், துணை தலைவர் செந்தில்குமார் மற்றும் ஆணையாளர் பெர்ப்பெற்றி டிடெரன்ஸ் லியோன் முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் சிங்கோனா பகுதியில் காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தை தடுக்க வேண்டும், வால்பாறை நகர் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கழிப்பிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும், அக்காமலை தடுப்பணையில் வனவிலங்குகள் விழுந்து விடாமல் இருக்க தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும், சக்தி தலநார் எஸ்டேட் சாலையை விரைவாக சீரமைப்பு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

இதையடுத்து குடிநீர் தொட்டி அமைத்தல், பயணிகள் நிழற்குடை அமைத்தல், பள்ளி சுற்றுச்சுவர் மற்றும் தடுப்பு சுவர் கட்டுதல், சத்துணவு மையம் சீரமைத்தல், மயானக்கூரை அமைத்தல், கழிவுநீர் வடிகால் அமைத்தல், நடைபாதை அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story