வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் கொண்டை ஊசி வளைவுகளுக்கு பூக்களின் பெயர் சூட்டப்படுமா?- பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு


வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் கொண்டை ஊசி வளைவுகளுக்கு பூக்களின் பெயர் சூட்டப்படுமா?- பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 29 Jun 2023 7:30 PM GMT (Updated: 30 Jun 2023 7:49 AM GMT)

வால்பாறை -பொள்ளாச்சி மலைப்பாதையில் கொண்டை ஊசி வளைவுகளுக்கு பூக்களின் பெயர் சூட்டப்படுமா? என்று பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளார்கள்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை -பொள்ளாச்சி மலைப்பாதையில் கொண்டை ஊசி வளைவுகளுக்கு பூக்களின் பெயர் சூட்டப்படுமா? என்று பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளார்கள்.

கொண்டை ஊசி வளைவுகள்

கோவை மாவட்டம் வால்பாறை -பொள்ளாச்சி மலைப்பாதை சாலைகள் அமைக்கப்பட்டு 120 ஆண்டுகளாகி விட்டது. வால்பாறை -பொள்ளாச்சி மலைப்பாதை சாலை 65 கிலோமீட்டர் தொலைவை கொண்டது. இதில் 40 கிலோ மீட்டர் தொலைவு சாலை 40 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட மலைப்பாதை சாலையாகும். ஆழியாறு வனத்துறை சோதனை சாவடியில் இருந்து பொள்ளாச்சி வரை 25 கிலோமீட்டர் சாலை மட்டுமே சமவெளி சாலையாகும். இதே போலத்தான் தேனியில் இருந்து சுற்றுலா தலமாக விளங்கும் மேகமலைக்கு செல்வதற்கு 62 கிலோமீட்டர் தொலைவிலான மலைப்பாதை உள்ளது. இதில் 40 கிலோமீட்டர் சாலை 18 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட மலைப்பாதை சாலையாகும். இந்த மலைப்பாதை சாலையில் உள்ள 18 கொண்டை ஊசி வளைவுகளுக்கும் இந்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கிடைக்கும் மலர்களை நினைவு கூறும் வகையில் தேனி நெடுஞ்சாலை துறையினர் ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவுக்கும் ஒவ்வொரு மலர்களின் தமிழ் பெயர்களை சூட்டி வருவது சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.

பூக்களின் பெயர்

ஒவ்வொரு மலர்களின் தமிழ் பெயர்களை சூட்டியுள்ளது தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது. இதேபோல் வால்பாறை -பொள்ளாச்சி மலைப்பாதை சாலையில் ஆழியாறு சோதனை சாவடியில் இருந்து அய்யர்பாடி எஸ்டேட் வரை 40 கொண்டை ஊசி வளைவுகள் அமைந்துள்ளது. ஆனைமலை உட்கோட்ட நெடுஞ்சாலை துறையினர் இந்த 40 கொண்டை ஊசி வளைவுகளுக்கும் வால்பாறை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கிடைக்கும் மலர்களை சுற்றுலா பயணிகளுக்கு தெரிவிக்கும் வகையில் பெயர் சூட்ட வேண்டும். வால்பாறை பகுதியில் உள்ள குறிஞ்சி பூ, செங்காந்தள் பூ, சம்பங்கி பூ, பிச்சிப்பூ, ஜகரண்டா பூ, சித்திரை கொன்னை பூ ஆகிய பூக்களின் பெயர்களை சூட்டி தமிழுக்கு பெருமை தேடித் தர வேண்டும் என்று நெடுஞ்சாலை துறைக்கு வால்பாறை பகுதி பொது மக்கள், ஆசிரியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story