அங்கன்வாடி முட்டைகளை வீட்டில் இறக்கியதால் வேன் சிறைபிடிப்பு


அங்கன்வாடி முட்டைகளை வீட்டில் இறக்கியதால் வேன் சிறைபிடிப்பு
x

ஒடுகத்தூர் அருகே அங்கன்வாடி மையத்திற்கு வந்த முட்டைகளை, வீட்டில் இறக்கியதால், வேனை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

வேலூர்

வீட்டில் இறக்கினார்

ஒடுகத்தூர் அடுத்த கீழ்கொத்தூர் கிராமத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி இயங்கி வருகின்றன. அங்கன்வாடியில் 20-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் இலவச முட்டை நாள்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

அங்கன்வாடி மைய பொறுப்பாளராக அதேப்பகுதியை சேர்ந்த கலைச்செல்வி (வயது 39) என்பவர் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில், அங்கன்வாடி மையத்திற்கு நேற்று மதியம் வேன் மூலம் முட்டைகள் கொண்டுவரப்பட்டது. இந்த முட்டைகளை அங்கன்வாடி மையத்தில் இறக்காமல் கலைச்செல்வி தனது வீட்டில் இறக்கி வைத்துள்ளார்.

வேன் சிறைபிடிப்பு

இதனால், அதிர்ச்சியடைந்த ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார் மற்றும் பொதுமக்கள் வேனை சிறைபிடித்து அவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து வீட்டில் இருந்த முட்டைகளை மீண்டும் வேனில் எடுத்து சென்று அங்கன்வாடி மையத்தில் இறக்கி வைக்கப்பட்டது.

இந்த சம்பவத்தால் அந்தப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

1 More update

Next Story