வேன்-கார் நேருக்குநேர் மோதல்; 5 பேர் காயம்
கம்மாபுரம் அருகே வேன்-கார் நேருக்குநேர் மோதிய விபத்தில் 5 போ் காயம் அடைந்தனர்.
கம்மாபுரம்
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நேற்று பக்தர்கள் 15 பேர் வேனில் புறப்பட்டனர். இதேபோல் சிதம்பரத்தில் இருந்து தேனி நோக்கி கார் ஒன்று 5 பேருடன் சென்று கொண்டிருந்தது. விருத்தாசலம்-பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் சு.கீணனூர் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக காரும், வேனும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் வேன் சாலையில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணித்த 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இதனிடையே விபத்தில் காயமடைந்தவர்கள் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றனர். விபத்து குறித்து அறிந்ததும் கம்மாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்துக்குள்ளான வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.