பெண் தற்கொலை வழக்கில் வேன் டிரைவர் கைது
தேசூரில் பெண் தற்கொலை வழக்கில் வேன் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை
சேத்துப்பட்டு
தேசூர் பேரூராட்சியில் உள்ள அருந்ததி பாளையத்தை சேர்ந்தவர் திவ்யா (வயது 28). இவர் உத்திரமேரூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
தினமும் வேன் மூலம் வேலைக்கு சென்று வந்தார். பெரணமல்லூர் குளக்கரையை சேர்ந்த ஜெயக்குமார் (35) வேன் டிரைவராக வேலை செய்து வந்தார்.
இவர் திவ்யாவிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கி இருந்தார். இதை திவ்யா திருப்பி கேட்டதற்கு கோபமாக திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த திவ்யா கடந்த 6-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அப்போது அவர் எழுதி வைத்த கடிதத்தில் ஜெயக்குமாரிடம் இருந்து பணம் வாங்கி தனது தாயாரிடம் கொடுக்குமாறு எழுதி இருந்தார்.
இதுகுறித்து தேசூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரேகாமதி வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தார்.
Related Tags :
Next Story