வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி பலி


வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி பலி
x
தினத்தந்தி 26 May 2023 12:15 AM IST (Updated: 26 May 2023 2:41 PM IST)
t-max-icont-min-icon

காளையார்கோவில் அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில் தொழிலாளி உயிரிழந்தார்.

சிவகங்கை

காளையார்கோவில்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள கடம்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ் (வயது 55). தொழிலாளி.

அதே பகுதியை சேர்ந்்த வேலு என்பவருடைய மகன் கண்ணன் (30). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் ஒரு ேமாட்டார் சைக்கிளில் மறவமங்கலத்தில் இருந்து காளையார்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே ஒரு வேன் வந்தது. எதிர்பாராதவிதமாக அந்த வேனும், மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் சம்பவ இடத்திலேயே தமிழ் உயிரிழந்தார்.

பலத்த காயம் அடைந்த கண்ணன் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story