வேன் கவிழ்ந்து விபத்து; 20 பேர் காயம்


வேன் கவிழ்ந்து விபத்து; 20 பேர் காயம்
x
தர்மபுரி

அரூர்

அரூர் பகுதியில் நடந்த ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடத்தூர் தாஸ் நகரை சேர்ந்த 25 பேர் வேன் மூலம் நேற்று அரூருக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து வேனில் கடத்தூருக்கு புறப்பட்டனர். இந்த வேன் மொரப்பூர் செல்லும் சாலையில் சமத்துவபுரம் அருகே சென்ற போது திடீரென நிலை தடுமாறி சாலை ஓரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அந்த வேனில் பயணம் செய்த மூக்கம்மாள், மாரியம்மாள், நாகராஜ், சிவா, அன்பு சந்திரா உள்ளிட்ட 20 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து அந்த பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஆம்புலன்சுகளுக்கு தகவல் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்சுகள் மூலம் மீட்கப்பட்டு அரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து அரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story