திம்பம் மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து விபத்து
திம்பம் மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
தாளவாடி
சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு வாழைக்காய் பாரம் ஏற்றிக்கொண்டு சரக்குவேன் நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த வேன் நேற்று இரவு 9 மணி அளவில் திம்பம் மலைப்பாதை 12-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில் டிரைவர் எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினார். இதுபற்றி அறிந்ததும் ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire