நம்பியூர் அருகே சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து - 7 பேர் படுகாயம்...!


நம்பியூர் அருகே சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து - 7 பேர் படுகாயம்...!
x

நம்பியூர் அருகே சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

ஈரோடு


ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பூதிமடைபுதூர் பகுதியிலுள்ள அண்ணமார் கோவில் திருவிழாவிற்காக கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் இருந்து 11 பேர் வேனில் வந்துள்ளனர்.

வேனை மகேஷ்(வயது27) என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்த வேன் குருமந்தூர் கொளப்பலூர் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது பூதி மடைபுதூரில் வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வேன் டிரைவர் மகேஷ், மஞ்சுநாதன் (45), நாகராஜ் (48), மாதம்மாள் (35), பத்திரம்மா (36), பல்லவி (34), திவ்யா ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அப்பகுதியினர் மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்து நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story