திருமண நிகழ்வுக்கு சென்ற போது வேன் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி
ஊத்தங்கரை அருகே திருமண நிகழ்வுக்கு சென்ற போது வேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் உறவினரின் திருமணத்திறகாக சென்று கொண்டிருந்தனர். வேன் சேலம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது லாரி ஒன்று வேனை முந்தி சென்றுள்ளது.
உடனே வேன் டிரைவரும் லாரியை முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. வேனில் பயணித்தவர்களில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த போலீசார் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பை வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story