திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வானதி சீனிவாசன் சாமி தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று மாலையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ சாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இன்று மாலையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வந்தார். அவர் கோவிலுக்குள் சென்று மூலவர் சண்முகர் மற்றும் அனைத்து சுவாமி சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவருக்கு பாஜக மகளிரணி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பாஜக மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொது செயலாளர்கள் சிவமுருகன் ஆதித்தன், சத்தியசீலன், மாநில மகளிர் அணி பொது செயலாளர் நெல்லையம்மாள், மாவட்ட மகளிர் அணி தலைவர் தேன்மொழி, மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் கரண், நகரத் தலைவர் நவ மணிகண்டன் ஆகியோர் இருந்தனர்.
Related Tags :
Next Story