வனத்துச்சின்னப்பர் ஆலய தேர்பவனி
வனத்துச்சின்னப்பர் ஆலய தேர்பவனி
வால்பாறை
வால்பாறை அருகே அய்யர்பாடி புனித வனத்துச்சின்னப்பர் ஆலய தேர்த்திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் 17-ந் தேதி மாலை 6 மணிக்கு முடீஸ் புனித அந்தோணியார் ஆலய பங்கு குரு மரிய அந்தோணிசாமி தலைமையில் கூட்டு பாடல் திருப்பலியும், நவநாள் சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு சோலையாறு நகர் புனித சூசையப்பர் ஆலய பங்கு குரு ஜார்ஜ் சகாயராஜ் தலைமையில் கூட்டு பாடல் திருப்பலி, புனித வனத்துச்சின்னப்பர் நவநாள் சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று தூய இருதய ஆலய பங்கு குரு ஜெகன் ஆண்டனி தலைமையில் பங்கு குரு ஆனந்த குமார் முன்னிலையில் திருவிழா சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி, புனித செபஸ்தியார் அம்பு நேர்ச்சை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு பொள்ளாச்சி வட்டார முதன்மை குரு ஜேக்கப் தலைமையில் தேர்த்திருவிழா நன்றி திருப்பலி, வனத்துச்சின்னப்பர் சொரூபம் தாங்கிய தேர்பவனி, திவ்ய நற்கருணை ஆசீர் வழிபாடு நடைபெற்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு குரு ஆனந்த குமார் தலைமையில் பங்கு மக்கள் செய்திருந்தனர்.