யானையின் சிறப்பை சினிமா பாடலாக பாடும் வனவர்-பணிச்சுமைக்கு மத்தியில் பாகன்கள் உற்சாகம்


யானையின் சிறப்பை சினிமா பாடலாக பாடும் வனவர்-பணிச்சுமைக்கு மத்தியில் பாகன்கள் உற்சாகம்
x
தினத்தந்தி 5 May 2023 9:15 AM IST (Updated: 5 May 2023 9:15 AM IST)
t-max-icont-min-icon

யானையின் சிறப்பை சினிமா பாடலாக பாடி வனவர் அசத்தினார். இதை கேட்டு பணிச்சுமைக்கு மத்தியில் பாகன்கள் உற்சாகமடைந்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

யானையின் சிறப்பை சினிமா பாடலாக பாடி வனவர் அசத்தினார். இதை கேட்டு பணிச்சுமைக்கு மத்தியில் பாகன்கள் உற்சாகமடைந்தனர்.

யானையின் சிறப்பு

பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில் 26 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் 10 யானைகள் கும்கி ஆபரேசனுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் பாகன்கள் சொல்லுக்கு கட்டுப்படும் யானைகள், வனவரின் சினிமா பாடலை கேட்டு மெய்மறந்து நிற்கின்றன. உலாந்தி வனச்சரகத்தில் கோழிமுத்தி முகாம் வனவரான சோழ மன்னன் அவ்வப்போது பாடல்களை பாடி பாகன்களை உற்சாகப்படுத்துகிறார்.

இதை கேட்டு பாகன்களும் கைகளை தட்டி அவரை மேலும் உற்சாகப்படுத்துகின்றனர். என்னவென்று சொல்வதம்மா என்கிற சினிமா பாடலின் மெட்டை எடுத்து அதை என்னவென்று சொல்வதம்மா யானையின் பேரழகை என்று யானைகளை புகழந்து பாட தொடங்குகிறார். அவரின் ஒவ்வொரு வரியும் கேட்பதற்கு ஆனந்தமாக உள்ளது.

பணிச்சுமை

யானைகளால் தான் வனப்பகுதி செழிப்பாக இருப்பதாகவும், அதனால் தான் மரங்களும் மனிதர்களும் வாழ முடிகிறது என்பதை சினிமா பாட்டின் மூலம் மக்களுக்கு உணர்த்தி இருப்பார். மேலும் பாடலின் கடைசி வரியில் உன்னை காக்க இருக்கிறது வனத்துறை என்று முடித்து இருக்கிறார். பாகன்களின் மிரட்டலான வார்த்தைகளை கேட்டு பழக்கப்பட்ட யானைகள் வனவர் சோழமன்னனின் இனிமையான பாடல்களை கேட்டதும் தலையை ஆட்டி உற்சாகம் அடைகிறது. இதுகுறித்து வனவர் சோழமன்னனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

கோவை சரகத்தில் வனக்காப்பாளராக கடந்த 2010-ம் ஆண்டு வனத்துறை பணியில் சேர்ந்தேன். அதன்பிறகு பதவி உயர்வு பெற்று டாப்சிலிப்பில் வனவராக பணிபுரிந்து வருகிறேன். அதற்கு முன் மேடைகளில் சினிமா பாடல்களை பாடி உள்ளேன். இதனால் எப்போதும் பாடல்களை பாடுவதில் அதீத ஆர்வம் உண்டு. கொரோனா காலத்திலும் பாடல்களை பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். ஒவ்வொரு வேலையிலும் பணிச்சுமை இருக்க தான் செய்யும். அது தெரியாமல் இருப்பதற்கு முகாமில் அவ்வப்போது பாடல்களை பாடுவேன். எனது பாட்டை கேட்டதும் யானை துதிக்கை, தலையை அசைப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story