மருத்துவ தரவரிசை பட்டியலில் 4-ம் இடம் பிடித்த வந்தவாசி மாணவி
7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ தரவரிசை பட்டியலில் வந்தவாசி மாணவி 4-ம் இடம் பிடித்து சாதனை படித்தார்.
வந்தவாசி
7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ தரவரிசை பட்டியலில் வந்தவாசி மாணவி 4-ம் இடம் பிடித்து சாதனை படித்தார்.
அரசு பள்ளி மாணவி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த அம்மணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன், டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அம்சா தேவி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். 3-வது மகள் ரோஜா.
இவர் வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்துவிட்டு பிளஸ்-2 வகுப்பை திருவண்ணாமலை சண்முகா அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார்.
நீட் தேர்வு
ரோஜாவுக்கு சிறுவயதில் இருந்தே டாக்டராக வேண்டும் என்று ஆசை இருந்தது. இந்த நிலையில் அவருக்கு நீட் தேர்வு எழுத வாய்ப்பு கிடைத்தது. அப்போது 12 நாட்கள் குறைவாக இருந்த காரணத்தால் தேர்வு எழுத முடியவில்லை.
மனம் தளராத அவர் மீண்டும் முயற்சி செய்து நீட் தேர்வு எழுத முடிவெடுத்தார். அப்போது நீட் தேர்வு எழுதுவதற்கு இரவும் பகலும் படித்து நீட் தேர்வு எழுதினார். இதில் அவர் 544 மதிப்பெண்கள் பெற்றார்.
4-ம் இடம்
இந்த நிலையில் மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவி ரோஜா 4-வது இடத்தை பிடித்து சாதனை படைத்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், டாக்டராகிய பின்னர் தன்னுடைய அம்மணம்பாக்கம் பகுதியில் உள்ள மக்களுக்கு இலவசமாக சேவை செய்ய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.
மாணவி ரோஜாவுக்கு கிராமமக்கள் மற்றும் பெற்றோர் இனிப்பு வழங்கி பாராட்டுகள் தெரிவித்தனர்.