வந்தே பாரத் ரெயில் மோதி மாடு பலி
அரக்கோணம் அருகே வந்தே பாரத் ரெயில் மோதி மாடு இறந்தது.
ராணிப்பேட்டை
அரக்கோணம்
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து கோவை வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று மாலை ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த அன்வர்திகான்பேட்டை ரெயில் நிலையம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது பசு மாடு மீது ரெயில் மோதியதில் மாடு இறந்தது.
இதில் வந்தே பாரத் ரெயிலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாததால் தொடர்ந்து ரெயில் அந்த இடத்தில் இருந்து கடந்து சென்றது.
இதுகுறித்து அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் உஸ்மான் ஷெரிப் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story