தள்ளுவண்டி கடைகள் அகற்றப்பட்டது
உடுமலை ராஜேந்திரா சாலையை ஆக்கிரமித்திருந்த தள்ளுவண்டி கடைகளை நகராட்சி அதிகாரிகள் உத்தரவின் பேரில் ஊழியர்கள் அகற்றி லாரியில் ஏற்றிச்சென்றனர்.
வாகன போக்குவரத்து
உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ராஜேந்திரா ரோடு, கபூர்கான் வீதி, ராமசாமி நகர் வழியாக சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த சாலையின் மூலமாக நகர மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயனடைந்து வந்தனர்.
இந்த சாலையில் வாரச்சந்தை, ெரயில் நிலையம், உழவர் சந்தை உள்ளிட்டவையும் வணிக வளாகங்கள், தனியார் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதனால் சாலையில் வாகன போக்குவரத்து தொடர்ந்து இருந்து கொண்டே உள்ளது.
தள்ளுவண்டி கடைகள் அகற்றம்
இந்த நிலையில் ராஜேந்திரா சாலையின் ஓரத்தில் தள்ளுவண்டிகளை நிறுத்தி சில்லறை வியாபாரிகள் விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். அதுமட்டுமின்றி சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்ட நடைபாதையிலும் கடைகள் வைக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ராஜேந்திரா சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்ட தள்ளு வண்டிகளை நகரமைப்பு ஆய்வாளர் உதயகுமார் தலைமையிலான நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் அகற்றி லாரியில் ஏற்றி சென்றார்கள்.
வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
இதனால் சீரான போக்குவரத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நிலவுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மேலும் இதே போன்று மற்ற பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்