தென்கொரியா இளம்பெண்ணை காதலித்து மணந்த வாணியம்பாடி என்ஜினீயர்


தென்கொரியா இளம்பெண்ணை காதலித்து மணந்த வாணியம்பாடி என்ஜினீயர்
x

தென்கொரியா நாட்டை சேர்ந்த இளம்பெண்ணை, வாணியம்பாடி என்ஜினீயர் காதலித்து இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

திருப்பத்தூர்

தென்கொரியா நாட்டை சேர்ந்த இளம்பெண்ணை, வாணியம்பாடி என்ஜினீயர் காதலித்து இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

என்ஜினீயர்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வெள்ளக்குட்டை பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 26). இவர் கோயம்புத்தூரில் உள்ள கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படித்துவிட்டு மேற்படிப்புக்காக தென் கொரியா நாட்டுக்கு சென்றார். அங்கு அவர் முனைவர் பட்டம் பெற்று தற்போது தென்கொரியாவிலேயே ஒரு நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த மூன்று வருடங்களாக தென்கொரியாவில் உள்ள பூசான் மாகாணத்தை சேர்ந்த சேங்வான்முன் (26) என்ற இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் இந்திய முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து பெற்றோர்களிடம் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தென்கொரியா பெண்ணுடன் திருமணம்

இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து, தென் கொரியாவை சேர்ந்த சேங்வான்முன் குடும்பத்தினர் கடந்த வாரம் இந்தியா வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பிரவீன்குமார், சேங்வான்முன் ஆகியோரின் திருமணம் இந்து முறைப்படி நடந்தது.

திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

1 More update

Next Story