வஞ்சிரம் மீன் ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை


வஞ்சிரம் மீன் ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை
x

வஞ்சிரம் மீன் ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

அரியலூர்

தமிழ்நாட்டில் விசை படகுகள் கடலுக்கு செல்லாது என்ற காரணத்தால் மீன் வரத்து படிப்படியாக குறையும். அதேபோல் ஆழ்கடலில் கிடைக்கும் மீன்கள் கிடைக்காது. இதனால் மீன் விலை உயரும். கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்கள் மற்றும் விசாகப்பட்டினத்தில் இருந்து மீன் கொண்டு வரப்படும். பொதுவாக வஞ்சிரம், வவ்வால், காலா, பன்னை, டூனா, டைகர் இறால், புளூ கிராப், மட் கிராப், லாப்ஸ்டர், கனவா, திருக்கை ஆகிய மீன் வகைகள் ஆழ்கடலில் கிடைக்கும் மீன்கள் ஆகும். இவை அனைத்தும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு பிற மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படும். மீன்பிடி தடை காலத்தில் அதிகபட்சமாக கிலோ வஞ்சிரம் ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. வெள்ளை வவ்வால் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்யப்படும். சங்கரா ரூ.500 முதல் ரூ.600 வரை, இறால் ரூ.500 என விற்பனை செய்யப்படும். மீன்பிடி தடைக்காலத்தில் ஒரு சில மீன்கள் மட்டுமே கிடைக்கும் என்று மீனவ அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.


Next Story