வன்னியா்சங்க கொடியேற்று நிகழ்ச்சி


வன்னியா்சங்க கொடியேற்று நிகழ்ச்சி
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ரிஷிவந்தியம் தொகுதியில் வன்னியா்சங்க கொடியேற்று நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட பிரம்மகுண்டம், குமாரமங்கலம், பவுஞ்சிப்பட்டு, அரியலூர் பகுதி கிளை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க கொடி ஏற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் இளையராஜா தலைமை தாங்கினார். பெரும்பள்ளி திரைப்பட இயக்குனரும், கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளருமான ஏ.கே.சாமி கலந்துகொண்டு கொடியேற்றினார். தொடர்ந்து அவர் பேசும்போது, நடைபெற உள்ள சித்திரை முழு நிலவு மாநாட்டில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க தொண்டர்கள் குடும்பத்துடன் கலந்துகொள்ள வேண்டும் என்றார். இதில் பவுஞ்சப்பட்டு கிளையை சேர்ந்த ஆறுமுகம், குமரமங்கலம் மொட்டையன், மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் ராஜா பிரபு, சங்கராபுரம் வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் சிவா, இளைஞர் அணி துணை தலைவர் சஞ்சு, மாவட்ட ஊடகப்பிரிவு பாண்டியன், நிர்வாகிகள் ஈஸ்வரன், பாலா, அஜித்குமார், அருள், பாண்டி மற்றும் பா.ம.க., வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Next Story