வன்னியர் சங்க நிர்வாகியின் மோட்டார் சைக்கிள் எரிப்பு


வன்னியர் சங்க நிர்வாகியின் மோட்டார் சைக்கிள் எரிப்பு
x

வன்னியர் சங்க நிர்வாகியின் மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டது.

திருச்சி

திருச்சி உறையூர் பாய்க்கார தெருவை சேர்ந்தவர் கதிர்ராஜா. பா.ம.க. முன்னாள் மாவட்ட செயலாளரான இவர், தற்போது திருச்சி மாவட்ட வன்னியர் சங்க செயலாளராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டில் நிறுத்தி இருந்தார். நள்ளிரவில் யாரோ மர்ம ஆசாமிகள் இவருடைய மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்துவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர். இதில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொருவரின் இருசக்கர வாகனமும் எரிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story