அந்தியூரில் மணக்கோலத்தில் கணவருடன் வந்து கிராம உதவியாளர் தேர்வு எழுதிய பெண்; தாமதமாக வந்த புதுமாப்பிள்ளைக்கு அனுமதி மறுப்பு

அந்தியூரில் மணக்கோலத்தில் கணவருடன் வந்து கிராம உதவியாளர் தேர்வு எழுதிய பெண்; தாமதமாக வந்த புதுமாப்பிள்ளைக்கு அனுமதி மறுப்பு
x

அந்தியூரில் மணக்கோலத்தில் கணவருடன் வந்து பெண் தேர்வு எழுதிவிட்டு சென்றார். மேலும் மனைவியுடன் தாமதமாக வந்த புதுமாப்பிள்ளைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் தேர்வு எழுத முடியாமல் ஏமாற்றமடைந்தார்.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூரில் மணக்கோலத்தில் கணவருடன் வந்து பெண் தேர்வு எழுதிவிட்டு சென்றார். மேலும் மனைவியுடன் தாமதமாக வந்த புதுமாப்பிள்ளைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் தேர்வு எழுத முடியாமல் ஏமாற்றமடைந்தார்.

திருமணம்

ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள 107 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நேற்று பல்வேறு மையங்களில் நடந்தது. அந்தியூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்திலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் 1,100 பேர் தேர்வு எழுதினார்கள்.

பவானி அருகே உள்ள வரதநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிணி (வயது 24). இவர் பி.காம். சி.ஏ. முடித்துள்ளார். இவருக்கும், வினோத் என்பவருக்கும் நேற்று காலை உறவினர்கள் முன்னிலையில் திருமணம் முடிந்தது. மணப்பெண் ஹரிணி கிராம உதவியாளர் தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பித்திருந்தார். இதைத்தொடர்ந்து அவர் தேர்வு எழுத விரும்பினார். இதுகுறித்து அவர் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.

மணக்கோலத்தில் தேர்வு

அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து மணக்கோலத்துடனேயே ஹரிணியும், வினோத்தும் காரில் அந்தியூரில் உள்ள தேர்வு மையத்துக்கு காலை 8 மணிக்கே சென்றனர். காலை 10 மணி ஆனதும் ஹரிணி தேர்வு மையத்துக்குள் ஹால் டிக்கெட்டுடன் நுழைந்தார்.

வினோத் வெளியே காத்திருந்தார். காலை 11 மணிக்கு தேர்வு முடிந்ததும் ஹரிணி மையத்தை விட்டு வெளியே வந்தார். பின்னர் அவர் காரில் ஏறி கணவருடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

புதுமாப்பிள்ளை ஏமாற்றம்

மேலும் அதே தேர்வு மையத்துக்கு மணக்கோலத்தில் மனைவியுடன் மற்றொரு புதுமாப்பிள்ளை தேர்வு எழுத வந்தார். ஆனால் அவர் தாமதமாக வந்ததாக கூறி தேர்வு மையத்துக்குள் தேர்வு கண்காணிப்பாளர் அனுமதிக்கவில்லை. இதனால் அவர் தேர்வு எழுத முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.

Next Story