வரதமாநதி அணையின் மதகு சீரமைப்பு பணி


வரதமாநதி அணையின் மதகு சீரமைப்பு பணி
x

பழனி அருகே உள்ள வரதமாநதி அணையின் மதகு பகுதியில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல்

பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் வரதமாநதி அணை உள்ளது. சவரிக்காடு, கோம்பைக்காடு பகுதியில் மழை பெய்யும் போது, அணைக்கு நீர்வரத்து ஏற்படும். பழனி, ஆயக்குடி பகுதியில் உள்ள குளங்களுக்கு இந்த அணையில் இருந்து தண்ணீர் செல்கிறது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுமட்டுமின்றி, ஆயக்குடி பேரூராட்சிக்கு குடிநீர் ஆதாரமாகவும் வரதமாநதி அணை உள்ளது.

வார விடுமுறை நாட்களில், பழனி சுற்று வட்டார பகுதி மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து அணையை பார்வையிட்டு செல்கின்றனர். பல்வேறு சிறப்புக்கு சொந்தமான அணையின் மதகு சேதம் அடைந்தது. இதனால் தண்ணீர் வெளியேறியது. இதனையடுத்து பொதுப்பணித்துறை சார்பில், அணையின் மதகை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி தற்போது அணையின் மதகு பகுதியை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், அணையில் இருந்து தண்ணீர் செல்லும் பாசன ஓடைகளில் உள்ள கால்வாய் மதகுகளும் விரைவில் சீரமைக்கப்பட உள்ளது என்றனர்.


Next Story