வரதராஜபெருமாள் கோவில் திருப்பணிக்குழு ஆலோசனை கூட்டம்

விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவில் திருப்பணிக்குழு ஆலோசனை கூட்டம்
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி கடைவீதியில் பழமை வாய்ந்த ஸ்ரீ பெருந்தேவியார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 17-ந்தேதி(வெள்ளிக்கிழமை) நடைபெற இருக்கிறது. இதையொட்டி திருப்பணிக்குழு ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் திருப்பணியில் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிப்பது குறித்தும், கும்பாபிஷேக பணியில் யாகசாலை அமைப்பது குறித்தும் பண்ருட்டி திருவதிகை பட்டாச்சாரியார்கள் ஸ்ரீராமன், ஸ்ரீதர் ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.
இதில் திருப்பணிக்குழு செயலாளர் பூர்ணாராவ், பொருளாளர் செல்வகுமார், ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், துணை தலைவர் சந்தானம், கவுரவ தலைவர் சுப்புராயலு, பேரூராட்சி முன்னாள் தலைவர் குமாரசாமி, பேரூராட்சி துணை தலைவர் பாலாஜி, நிர்வாகிகள் ராஜா, சங்கர், வாசு, பாலசுப்பிரமணியன், பாபு, சக்தி, பலராமன், ஸ்பதி முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.






