அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு


அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு
x

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வரட்டுப்பள்ளம் அணை

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான பர்கூர் மலையின் அடிவார பகுதியில் அமைந்துள்ளது அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை. இங்கு மழைக்காலங்களில் மலைப்பகுதிகளில் பெய்யும் மழை நீர் தேக்கி வைக்கப்படுகின்றன. அணை நீர் நிரம்பியதும் அதன் உபரி நீர் ஏரிகளுக்கும் மற்றும் கொப்பு வாய்க்கால் மூலம் விவசாய பாசனத்துக்கும் திறந்துவிடப்படுகிறது. மேலும் எந்தவித கழிவு நீரும் கலக்காத அணையின் நீரில் மீன் வளத்துறையின் மூலம் மீன் குஞ்சுகள் விடப்படுகின்றன. அவை வளர்க்கப்பட்டு பிடிக்கப்பட்டு டெண்டர் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

சுத்தமான மீன் என்பதால் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் வரட்டுப்பள்ளம் அணைக்கு வந்து மீன்களை வாங்கி செல்வார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மீனவர்கள் அணையில் மீன்பிடிப்பதற்காக வலை விரித்துவிட்டு சென்றனர். மாலையில் சென்று பார்த்தபோது அணை தண்ணீரில் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்தனர்.

செத்து மிதந்தன

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அணைக்கு பொதுமக்கள் மீன்கள் வாங்க வந்தனர். சம்பவம் குறித்து அறிந்த பொதுமக்கள் இதுபற்றி மீன்வளத்துறையினரிடம் கேட்டனர்.

அதற்கு மீன்வளத்துறையினர் கூறும்போது, 'மீன்கள் செத்து மிதந்த பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதி. அங்கு மீனவர்கள் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை. யாராவது அணை தண்ணீரில் விஷம் கலந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனவே பகுப்பாய்வுக்காக மீனின் உடல் கோவைக்கு அனுப்பி வைக்கப்படும். ஆய்வுக்கு பின்னரே மீன்கள் எப்படி இறந்தது என்று தெரியவரும்' என்றனர்.

வரட்டுப்பள்ளம் அணையில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



Next Story