அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது
திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
கோரிக்கை மனுக்கள்
திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அய்யம்பாளையம், அடிஅண்ணாமலை, தேவனந்தல் ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களிடம் திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலு இன்று கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் மக்களை தேடி வந்து கொண்டிருக்கிறது.
மேலும் 15-வது நிதி குழுவில் இருந்து ஊராட்சிகளில் சிமெண்டு சாலை, குடிநீர் குழாய் அமைப்பது, கழிவுநீர் பக்க கால்வாய், பள்ளி சுற்றுச்சுவர் அமைப்பது, பண்ணை குட்டை அமைப்பது, பயணியர் நிழற்குடை போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இந்த ஆட்சி அமைந்தவுடன் மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி மற்றும் பெண்களுக்கான இலவச பஸ் பயணம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் பெண் குழந்தைகள் உயர்கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மகளிர் உரிமைத் தொகை
வருகிற 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளன்று பெண்களுக்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழக முதல்-அமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அய்யம்பாளையம், அடி அண்ணாமலை, தேவனந்தல் ஆகிய ஊராட்சியில் ரூ.5 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் நடந்து வருகிறது.
இந்த முகாமில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது தகுதியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் ஆய்வு மேற்கொண்டு தகுதி வாய்ந்தவர்களுக்கு கட்டாயமாக அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, பட்டா, சிட்டா பெயர் மாற்றம், புதிதாக நீர் தேக்கத்தொட்டி, கழிவறை வசதி, தெருவிளக்கு அமைத்து தருதல், வேலைவாய்ப்பு, காதொலி கருவி, மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனர்.
நடவடிக்கை எடுக்க உத்தரவு
அந்த மனுக்களை பெற்று கொண்ட அமைச்சர் அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ரிஷப், உதவி கலெக்டர் மந்தாகினி, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சரண்யாதேவி, மாநில தடகள சங்க துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு வாரிய உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருணாசலம், பிரித்திவிராஜ், தி.மு.க. மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், அருணை வெங்கட், ஒன்றிய செயலாளர் மெய்யூர் சந்திரன், மாவட்ட கவுன்சிலர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.