வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்


வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
x

நாரியமங்கலம் கிராமத்தில் நடந்தவருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த நாரியமங்கலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

ஊராட்சி மன்ற தலைவர் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம், ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணு, ஒன்றிய கவுன்சிலர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழ்பென்னாத்தூர், வேட்டவலம் வட்டார மருத்துவ அலுவலர்கள் சரவணன், விஜயகுமார் வரவேற்றனர்.

முகாமை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து 10-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் மற்றும் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின்கீழ், 10 நோயாளிகளுக்கு மருந்து பெட்டகங்களையும் வழங்கி பேசினார்.

முகாமில் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவுநோய், தோல் நோய், மகப்பேறு மருத்துவம், புற்றுநோய், காசநோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 15 பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர்.

இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் யசோதை கண்ணன், சித்த மருத்துவர் பகுத்தறிவு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதீஷ்பாபு, வட்டார கல்வி அலுவலர்கள் மோகன், ராமமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன்,

சித்த மருந்தாளுனர் முருகன், தலைமைஆசிரியர் காசிவேல், கிளை செயலாளர்கள் மணவாளன், கருணாநிதி, வெங்கடேசன், சகாதேவன், மகளிரணி துணை செயலாளர் சத்யாகுமரேசன், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், டெங்கு பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் கழிக்குளம் மருத்துவ அலுவலர் திலீபன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story