வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது
திருநெல்வேலி
அம்பை:
அம்பை அருகே மன்னார்கோவில் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் நெல்லை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறையின் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. யூனியன் தலைவர் பரணிசேகர் தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கர்ப்பிணிகளுக்கு தாய், சேய் நல பெட்டகம் மற்றும் ஊட்டச்சத்து உணவு வகைகள் வழங்கப்பட்டன. இதில் மன்னார்கோவில் ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி கல்பனா பூதத்தான், துணை தலைவர் நிர்மலா சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story