வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்


வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
x

வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை முனிரத்தினம் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கத்தை அடுத்த சிறுகரும்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வட்டார பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி குணசேகரன் தலைமை தாங்கினார். காவேரிப்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் அனிதா குப்புசாமி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சக்தி, ஒன்றிக்குழு உறுப்பினர்கள் ஞானமணி அருளரசு, தீபா கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரம்ப சுகாதார மருத்துவமல்லா மேற்பார்வையாளர் மோகன சுந்தரம் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் கலந்து கொண்டு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் பொதுமக்கள் அவரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

இதனை தொடர்ந்து 5 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து அடங்கிய பெட்டகம், 5 பேருக்கு மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகம், மருத்துவ அடையாள அட்டை ஆகியவற்றை ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ வழங்கினார். பின்னர் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை எம்.எல்.ஏவிடம் வழங்கினர். இதில் டாக்டர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் பயனாளிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் குமார் நன்றி கூறினார்.


Next Story