வருசாபிஷேகம்


வருசாபிஷேகம்
x

மாகாளியம்மன் கோவில் வருசாபிஷேகம் நடைபெற்றது

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆத்தூர் கஸ்பா கீரனூர் மாகாளியம்மன் கோவிலில் வருசாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி காலையில் கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜை, அதனைத்தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து லட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. விமான கலசங்கள், மூலவர், பரிவார தேவதைகளுக்கு மகா அபிஷேகமும், வருசாபிஷேகமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story