கிருஷ்ணகிரி பழையபேட்டைசோமேஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேக விழா
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி பழையபேட்டை பிரசன்ன பார்வதி சமேத சோமேஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜை, கலச ஸ்தாபனம், ருத்ர பாராயணம் மற்றும் ஹோமம் நடந்தது. தொடர்ந்து சாமிக்கு மகாதீபாரதனை, பிரசாத வினியோகம் ஆகியவை நடந்தன. மாலை விக்னேஸ்வர பூஜை, மகாசங்கல்பம், 108 கலச ஸ்தாபனம், 108 சங்கஸ்தாபனம், முதல்கால வேதிகார்ச்சனை, முதல்கால யாக பூஜையும், இரவு தீபாராதனை ஆகியவை நடந்தன. நேற்று காலை 2-ம் கால யாகபூஜைகள், தீபாராதனையும், தொடர்ந்து சாமிக்கு 108 குடம் கலசாபிஷேகம், அம்பாளுக்கு 108 சங்காபிஷேகம், மகா அபிஷேகம் நடந்தன. மதியம் சாமிக்கு மகாதீபாராதனை, இரவு சாமி திருவீதி உலா நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story