மக்களை தேடி மனுக்கள் பெறுதல் முகாமில் ரிஷிவந்தியம் தொகுதி மக்கள் அதிகம் பயன்பெற வேண்டும் வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ பேச்சு
மக்களை தேடி மனுக்கள் பெறுதல் முகாமில் ரிஷிவந்தியம் தொகுதி மக்கள் அதிகம் பயன்பெற வேண்டும் என வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ பேசினாா்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அடுத்த ஆலூர் கிராமத்தில் மக்களை தேடி மனுக்கள் பெறுதல் முகாம் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், திருக்கோவிலூர் தாசில்தார் கண்ணன், ஊராட்சி உதவி இயக்குனர் ரத்தினமாலா, ஒன்றியக்குழு தலைவர் அஞ்சலாட்சி அரசகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஏகாம்பரம், ஒன்றிய குழு துணை தலைவர் தனம்சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக்கோவிலூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எம்.ராஜேந்திரன் வரவேற்றார். முகாமில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றார். தொடர்ந்து அவர் பேசுகையில், ஒவ்வொரு கிராமத்திற்கும் அதிகாரிகள் குழுவினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று பொது மக்களை சந்தித்து மக்களின் குறைகளை போக்கிடவும், கோரிக்கை மனுவாக பெற்று நடவடிக்கை எடுக்கவும், மக்களை தேடி மனுக்கள் பெறுதல் முகாம் நடத்த அரசு பரிசீலனை செய்தது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலெக்டா் மேற்பார்வையில் இந்த முகாம் நடைபெற்று வருகிறது. என்னை பொறுத்தவரை ரிஷிவந்தியம் தொகுதி மக்கள் அனைவருமே இந்த திட்டத்தின் கீழ் பயனடைய யவேண்டும் என்று மக்களை சந்தித்து மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்து வருகிறேன். அடுத்த மாதம் 20-ந்தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தற்போது பெறப்படும் மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். எனவே இதில், கலந்து கொண்டவர்கள் மட்டுமின்றி அனைவரும் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலாளர்களிடம் மனு கொடுத்து பயன்பெறலாம் என்றார். முகாமில் ஒன்றிய துணை செயலாளர் தணிகாசலம், ஒன்றிய நிர்வாகிகள் முருகன், செல்லமணிசுப்பிரமணி, காமராஜ், பிரகாஷ், ஆறுமுகம், ஜெயபால், மாரிச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் முத்துலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர்கள் விஜிதணிகாசலம், செல்விகோபி, சரஸ்வதிபாலாஜி, மலர்முருகன், ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.