வி.சி.க. நிர்வாகிகள் கூட்டம்
மானாமதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கை
மானாமதுரை,
மானாமதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் விடுதலை மாணிக்கம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஏப்ரல் 14-ந்தேதி அம்பேத்கர் பிறந்த தினத்தன்று சிவகங்கையில் ஜனநாயகம் காப்போம் சிறுத்தைகள் அணிவகுப்பு என்ற பேரணி நடைபெற இருக்கிறது. இதில், திரளானோர் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட செயலாளர் திருமொழி, சுடர்மணி, மாவட்ட துணை செயலாளர் பாஸ்கரன், பொருளாளர், மாவட்ட செய்தி தொடர்பாளர் அர்ஜூனன், சட்டமன்ற தொகுதி செயலாளர் பாலையா காளிமுத்து, பெரியசாமி, மாநில செயலாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story