வேப்பிலை மாரியம்மன் கோவிலில் வேடபரி திருவிழா


வேப்பிலை மாரியம்மன் கோவிலில் வேடபரி திருவிழா
x

மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவிலில் வேடபரி திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி

மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவிலில் வேடபரி திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வேடபரி திருவிழா

மணப்பாறை நகரின் மையப்பகுதியில் பிரசித்திபெற்ற வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 30-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் விழாவின் சிகர நிகழ்ச்சியாக பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வேடபரி நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தரளி வேடபரி வீதிஉலா வந்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் ராஜவீதிகளின் வழியாக சென்று வேடபரி வாகனம் மீண்டும் கோவிலை வந்தடைந்தது. அம்மன் வீதிஉலா வந்தபோது, ஆரவாரத்தோடு பக்தர்கள் மாலைகளை போட்டனர். மணப்பாறை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர்.

பாரம்பரிய கலைகள்

முன்னதாக பாரம்பரிய கலைகளான நெருப்பு தீப்பந்தம் ஏந்தி ஆடுதல், சிலம்பம், கரகம் என பல்வேறு நடனங்கள் நடைபெற்றது. பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். கிடா, கோழி வெட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றுது. மேலும் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும், கரும்பு தொட்டில் கட்டியும் வந்தனர்.

நாளை (புதன்கிழமை) காலை காப்பு களைதல் நிகழ்ச்சியுடன் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. இதையொட்டி சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை பணிகளை மணப்பாறை நகராட்சி நிர்வாகமும், பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளை போலீசாரும் செய்திருந்தனர்.


Next Story