வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில்நோயாளிகளிடம் செல்போன்கள், பணம் திருட்டு


வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில்நோயாளிகளிடம் செல்போன்கள், பணம் திருட்டு
x
தினத்தந்தி 15 March 2023 11:24 PM IST (Updated: 16 March 2023 5:27 PM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளிடம் செல்போன்கள், பணம் திருடப்பட்டது.

திண்டுக்கல்

வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது மர்மநபர் ஒருவர் ஆஸ்பத்திரிக்குள் நைசாக நுழைந்தார். பின்னர் அவர், அழகாபுரியை சேர்ந்த ராமசாமி (வயது 41), வேடசந்தூரை சேர்ந்த சங்கீதா (26), கிழக்கு மாரம்பாடியை சேர்ந்த ஜெபஸ்தியம்மாள் (40) ஆகியோர்களிடம் இருந்து 4 செல்போன்களை திருடினார்.

இதேபோல் ஜெபஸ்தியம்மாள், ராமசாமி ஆகியோர் வைத்திருந்த தலா ரூ.1,000-த்தை மர்ம நபர் திருடி சென்று விட்டார். காலையில் எழுந்த நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் செல்போன்கள் மற்றும் பணம் திருடு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் லோகநாதனிடம் நோயாளிகள் புகார் செய்தனர். இதனையடுத்து, வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் லோகநாதன் புகார் அளித்தார். அதன்பேரில் செல்போன்கள், பணம் திருடிய மர்ம நபர் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வேடசந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story