வீர காளியம்மன் கோவில் குடமுழுக்கு


வீர காளியம்மன் கோவில் குடமுழுக்கு
x

கோடங்குடி வீர காளியம்மன் கோவில் குடமுழுக்கு

மயிலாடுதுறை


மயிலாடுதுறை அருகே கோடங்குடியில் கிராம மக்களால் புதிதாக கட்டப்பட்ட வீர காளியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது.இதை முன்னிட்டு கடந்த 9-ந் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. இதனையடுத்து நேற்று இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று மகாபூர்ணாகுதி செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மேள தாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோபுர கலசங்களை அடைந்தது. அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத புனித நீர் கோபுர கலத்தின் மீது ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story