வீர நரசிம்மர் கோவில் திருவிழா
மங்கைமடம் வீர நரசிம்மர் கோவில் திருவிழா
மயிலாடுதுறை
திருவெண்காடு:
திருவெண்காடு அருகே மங்கைமடத்தில் வீர நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச நரசிம்ம கோவில்களில் ஒன்றாகும். முன்னொரு காலத்தில் திருமங்கையாழ்வார் இந்த பெருமாளை வணங்கி தினந்தோறும் ஆயிரம் பெண்களுக்கு அன்னதானம் வழங்கியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. இதன் அருகே உள்ள திருக்குரவளூர் திருமங்கையாழ்வார் பிறந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு சிறப்புகளை பெற்ற நரசிம்மருக்கு கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் ஆண்டு திருவிழா தொடங்கியது. திருவிழாவையொட்டி நேற்றுமுன்தினம் நரசிம்மருக்கு பல்வேறு மங்கள பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து நரசிம்மர் கருட வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் நரசிம்மருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story