வீரமாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


வீரமாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

வீரமாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணி குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக கோவிந்தராஜ், செயலாளராக முத்து, பொருளாளராக அய்யாக்கண்ணு ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். இதையடுத்து கோவிலில் திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. பின்னர் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. கும்பாபிேஷகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நான்கு கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. பல்ேவறு பகுதிகளில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டது. பின்னர் அதனை கலசங்களில் நிரப்பி யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்டது. இதைதொடர்ந்து நேற்று காலை யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார்கள் மேள தாளம் முழங்க கலசங்களை தலையில் சுமந்து கொண்டு கோவிலை வலம் வந்தனர். இதையடுத்து சிவாச்சாரியார்கள் வீரமாகாளியம்மன் கோவில் மூலஸ்தான விமான கலசத்தில் வேதமந்திரங்கள் முழங்க புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் அமைச்சர் மெய்யநாதன், ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., நவாஸ்கனி எம்.பி, நகராட்சி தலைவர் ஆனந்த், திருப்பணி குழு செயலாளரும், துணை தலைவருமான முத்து, ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், அறநிலையத்துறை இணை ஆணையர் சூர்யநாராயணன், உதவி ஆணையர் அனிதா, செயல் அலுவலர்கள் முத்துகுமரன், கார்த்திகேயன், சந்திரசேகரன், சத்தியராஜ் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். வீரமாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story