வீரமாகாளியம்மன் கோவில் மது எடுப்பு விழா


வீரமாகாளியம்மன் கோவில் மது எடுப்பு விழா
x

வீரமாகாளியம்மன் கோவில் மது எடுப்பு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே வம்பனில் வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு மது எடுப்பு விழா நடைபெற்றது. மது எடுப்பு வி ழாவை முன்னிட்டு கிராமமக்கள் குடத்தில் நவதானியங்களை நிரப்பி அதில் தென்னை, பாலைகளை வைத்து அலங்கரித்து அதனை தாரை தப்பட்டைகள் முழங்க வாண வேடிக்கையுடன் ஊர்வலமாக வீரமாகாளியம்மன் கோவிலுக்கு எடுத்து வந்தனர். பின்னர் கோவிலை சுற்றிவந்து பாலைகளை குளத்தில் விட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் மழவராயன்பட்டி, வீரடிபட்டி, வம்பன், பாப்பான்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பெண்கள் தலையில் முளைப்பாரி பாத்திரங்களை சுமந்தபடி ஊர்வலமாக சென்று கோவிலை சுற்றி கும்மியடித்தும் குலவையிட்டும் அம்மனை வழிபட்டனர். கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.


Next Story