வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழா:கம்பத்தில் புனித நீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு


வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழா:கம்பத்தில் புனித நீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, கம்பத்தில் புனித நீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

தேனி



தேனி அருகே வீரபாண்டியில் கவுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் கம்பம் நடுதலுடன் தொடங்கியது. இந்நிலையில் நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் கோவிலில் நடப்பட்ட கம்பத்தில் மஞ்சள் மற்றும் வேப்பிலை கலந்து புனித நீரை ஊற்றி வழிபாடு நடத்தினர்.


Related Tags :
Next Story