வீரவநல்லூர் அணி வெற்றி


வீரவநல்லூர் அணி வெற்றி
x

பாளையங்கோட்டையில் நடந்த கபடி போட்டியில் வீரவநல்லூர் அணி வெற்றி பெற்றது. மாநில போட்டிக்கு 12 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

2023-ம் ஆண்டு முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான ஆண்கள் கபடி போட்டி பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் கடந்த 11-ந்தேதி தொடங்கியது. இதில் 29 கல்லூரி ஆண்கள் அணி பங்கு பெற்றது. இறுதி போட்டியில் வீரவநல்லூர் ஜான்ஸ் உடற்கல்வியியல் கல்லூரி அணியும், வடக்கன்குளம் இந்தியன் பாலிடெக்னிக் கல்லூரி அணியும் மோதின. இதில் வீரவநல்லூர் அணி 37 -12 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

இதையடுத்து வடக்கன்குளம் அணி 2-வது இடத்தையும், பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி அணி மூன்றாம் இடத்தையும் பெற்றது. இறுதிப்போட்டியை நெல்லை மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர் எஸ்.கே.எம்.சிவக்குமார், செயலாளர் பகவதி பெருமாள், இணைச் செயலாளர்கள் சவுந்தர பாண்டியன் மற்றும் அலி, கல்லூரி முதல்வர் அப்துல் காதர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். சுந்தர்ராஜன் தலைமையிலான நடுவர் குழு போட்டிகளை நடத்தினர். பங்குபெற்ற 29 அணிகளில் இருந்து சிறந்த 12 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் பங்கு பெற உள்ளனர்.


Next Story