வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை குறைந்தது


வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை குறைந்தது
x
தினத்தந்தி 11 Aug 2023 2:15 AM IST (Updated: 11 Aug 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

வரத்து அதிகரிப்பு காரணமாக கோவையில் காய்கறி விலை குறைந்தது.

கோயம்புத்தூர்


கோவை


வரத்து அதிகரிப்பு காரணமாக கோவையில் காய்கறி விலை குறைந்தது.


காய்கறிகள் விலை


கோவையில் கடந்த சில நாட்களாக காய்கறி விலை அதிகமாக இருந்தது. குறிப்பாக கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.140, சின்ன வெங்காயம் ரூ.150 முதல் ரூ.200, இஞ்சி ரூ.300-க்கு அதிகமாக விற்பனையானது. மேலும் கேரட் ரூ.80, கத்தரிக்காய் ரூ.120, பீன்ஸ் ரூ.80-க்கு விற்றது. காய்கறிகளின் விலை உயர்வால் பொதுமக்கள் கவலை அடைந்தனர். இதனால் காய்கறி மார்க்கெட்டுகள், உழவர் சந்தைகளில் மக்கள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது.


இந்த நிலையில் கோவை டவுன்ஹாலில் உள்ள டி.கே. காய்கறி மார்க்கெட்டில் நேற்று காய்கறிகளின் வரத்து அதிகமாக இருந்தது. இதனால் காய்கறிகளின் விலை குறைந்து காணப்பட்டது. நேற்று அங்கு காய்கறிகளின் (ஒருகிலோ) விலை விவரம் வருமாறு:-


குறைந்தது


தக்காளி-ரூ.70, சின்ன வெங்காயம் -ரூ.80, இஞ்சி -ரூ.240, முட்டைக் கோஸ்- ரூ.15, கத்தரிக்காய்-ரூ.40, கேரட்-ரூ.40, பீன்ஸ்-ரூ.70, முள்ளங்கி -ரூ.15, பீட்ரூட்-ரூ.15, மேரக்காய்- ரூ.20, பெரிய வெங்காயம்-ரூ.25, அவரைக்காய்- ரூ.40 மற்றும் பூண்டு -ரூ.180 முதல் ரூ.200 வரை விற்பனையானது.


இது குறித்து டி.கே.மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த பைசல் ரகுமான் கூறுகையில், தற்போது காய்கறிகளின் வரத்து அதிகரித்து உள்ளதால் விலை குறைந்து உள்ளது. வடமாநிலங் களில் மழை பெய்வதால் பொிய வெங்காயத்தின் விலை சற்று அதிகரிக்க கூடும். மற்ற காய்கறிகளின் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது என்றார்.



Next Story