மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து வெகுவாக குறைந்தது--விலையேற்றம் நீடிக்கும் என வியாபாரிகள் சங்கம் கருத்து


மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு  காய்கறி வரத்து வெகுவாக குறைந்தது--விலையேற்றம் நீடிக்கும் என வியாபாரிகள் சங்கம் கருத்து
x
தினத்தந்தி 13 July 2023 9:14 PM GMT (Updated: 14 July 2023 3:22 AM GMT)

மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. காய்கறி விலையேற்றம் நீடிக்்கும் என வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மதுரை


மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. காய்கறி விலையேற்றம் நீடிக்்கும் என வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மாட்டுத்தாவணி மார்க்கெட்

தென் மாவட்டங்களில் மிக முக்கியமானதாக மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் விளங்குகிறது. இங்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான லாரிகளில் காய்கறிகள் வருகின்றன. இங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதுபோல் மதுரையில் உள்ள சில்லறை வியாபாரிகளும் இந்த மார்க்கெட்டுக்கு வந்து, தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

சில நாட்களாக தக்காளி, சின்ன வெங்காயம், மிளகாய், இஞ்சி ஆகியவற்றின் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக, தக்காளியின் விலை ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது. நேற்றும் அதே நிலைதான் நீடித்தது.

அதாவது, 15 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டியின் விலை ரூ.1300 வரை உள்ளது. இதுபோல், சின்ன வெங்காயத்தின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து, மாட்டுத்தாவணி அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் சின்னமாயன் கூறுகையில், "மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் கடந்த சில வாரங்களாக காய்கறிகளின் விலை அதிகமாக உள்ளது. எல்லா காய்கறிகளின் வரத்தும் குறைந்துள்ளதால் இந்த விலையேற்றம் உள்ளது.

மிளகாய் விலை குறைகிறது

சமீபகாலமாக ஒரு கிலோ மிளகாய் ரூ.150 வரை விற்பனையானது. தற்போது அதன்விலை வெகுவாக குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, ஒரு கிலோ மிளகாய் ரூ.70 முதல் ரூ.100 வரை விற்பனையானது. ஆனால், தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை அதிகமாக உள்ளது. சின்ன வெங்காயத்தை பொறுத்தவரையில் மழை காரணமாக அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மொத்த விலையில் சின்ன வெங்காயம் ரூ.150 வரையிலும், சில்லரை விலையில் ரூ.170 வரையிலும் உள்ளது. இதுபோல், இஞ்சியும் மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் ரூ.170 முதல் ரூ.280 வரை விற்பனையாகிறது. வரும் நாட்களில் காய்கறிகள் அதிக அளவில் கொண்டுவரப்பட இருக்கிறது. அதன்பின்னர், காய்கறிகளின் விலை குறைய வாய்ப்பு உள்ளது, என்றார்.


Related Tags :
Next Story