நெகமத்தில் விஷம் குடித்து காய்கறி வியாபாரி தற்கொலை-கடன் தொல்லையா? போலீஸ் விசாரணை

நெகமத்தில் விஷம் குடித்து காய்கறி வியாபாரி தற்கொலை-கடன் தொல்லையா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 28 Nov 2022 12:15 AM IST (Updated: 28 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

நெகமத்தில் விஷம் குடித்து காய்கறி வியாபாரி தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லை காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோயம்புத்தூர்

நெகமம்

நெகமத்தில் விஷம் குடித்து காய்கறி வியாபாரி தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லை காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காய்கறி வியாபாரி

நெகமம் பஜனை கோவில் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). காய்கறி வியாபாரி. இவரது மனைவி கவுசல்யா (34). இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார்.

இந்தநிலையில் என்.சந்திராபுரம் ரோட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் பின்புறமுள்ள இடத்தில் விஷம் குடித்து விட்டு செந்தில்குமார் மயங்கி கிடந்தார். இதனை கவனித்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கடன் தொல்லையா?

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செந்தில்குமார் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கடன் பிரச்சினையால் விஷம் குடித்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தற்கொலை செய்து கொண்ட செந்தில்குமாரின் உடலை பார்த்து அவரின் மனைவி மற்றும் மகள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

Next Story