லாரி மோதி காய்கறி வியாபாரி பலி; டிரைவருக்கு ஓராண்டு சிறை-ஆலங்குடி கோர்ட்டு தீர்ப்பு


லாரி மோதி காய்கறி வியாபாரி பலி; டிரைவருக்கு ஓராண்டு சிறை-ஆலங்குடி கோர்ட்டு தீர்ப்பு
x

லாரி மோதி காய்கறி வியாபாரி பலியான வழக்கில் டிரைவருக்கு ஓராண்டு சிறை விதித்து ஆலங்குடி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே உள்ள மேலாத்தூர் வடக்கு பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவருடைய மகன் சிதம்பரம். இதேபகுதியை சேர்ந்தவர் சின்னப்பா. நண்பர்களான இவர்கள் 2 பேரும் சைக்கிளில் சென்று காய்கறி வியாபாரம் செய்து வந்தனர். கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 1-ந் தேதி இவர்கள் வழக்கம்போல் காட்டுப்பட்டி சாலையில் சைக்கிளில் சென்று காய்கறிகளை விற்பனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது பட்டுக்கோட்டை அருகே உள்ள ஏனாதியை சேர்ந்த தனபால் (வயது 28) என்பவர் ஓட்டி சென்ற லாரி சிதம்பரம் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் தனபாலை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை ஆலங்குடி கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய்பாரதி தீர்ப்பளித்தார். அதில் விபத்திற்கு காரணமான டிரைவர் தனபாலுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஒரு மாதகால சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


Next Story