ஈரோட்டில் முருங்கைக்காய் விலை கிடுகிடு உயர்வு; ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனை


ஈரோட்டில் முருங்கைக்காய் விலை கிடுகிடு உயர்வு; ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனை
x

ஈரோட்டில் முருங்கைக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனையானது.

ஈரோடு

ஈரோட்டில் முருங்கைக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனையானது.

விலை அதிகம்

ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் வ.உ.சி. பூங்கா மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. அங்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இங்கிருந்து சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மளிகை கடைக்காரர்கள் காய்கறிகளை மொத்தமாக வாங்கி செல்கிறார்கள். இதேபோல் சில்லரை விற்பனையும் நடப்பதால் பொதுமக்கள் வந்து காய்கறிகளை வாங்குகிறார்கள்.

காய்கறிகளின் வரத்து குறைவாக இருக்கும்போது விலை சற்று அதிகமாகும். பனிப்பொழிவு காரணமாக பெரும்பாலான காய்கறிகளின் விலை அதிகமாக உள்ளது. பீன்ஸ், கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.50-க்கு மேல் விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக முருங்கைக்காய் வரத்து குறைந்து காணப்படுகிறது. இதனால் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

ஒரு கிலோ ரூ.150

ஈரோடு மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.150-க்கு விற்பனையானது. மேலும், ஒரு முருங்கைக்காய் ரூ.10 முதல் ரூ.15 வரை விலைபோனது. விலை அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே முருங்கைக்காய்களை வாங்கி சென்றார்கள். பலர் விலை அதிகம் காரணமாக வாங்குவதை தவிர்த்தனர்.

இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், "ஈரோட்டுக்கு ஒட்டன்சத்திரத்தில் இருந்து முருங்கைக்காய்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. வரத்து குறைவு காரணமாக விலை அதிகரித்து உள்ளது. வரத்து அதிகரிக்க தொடங்கியதும் விலை குறைய வாய்ப்புள்ளது", என்றார்.


Next Story