அடக்கி வாசிக்கும் காய்கறி...அடங்க மறுக்கும் மளிகை விலை
திருப்பூரில் சீரகம், மல்லி மற்றும் மிளகு உள்ளிட்ட மளிகைப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளது.
மளிகை விலை அதிகரிப்பு
தற்போது சந்திரயான்-3, ஆதித்்யா விண்கலத்தைப்பற்றி நாேட பேசிக்கொண்டிருக்கும் நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தக்காளி, சின்ன வெங்காயத்தைப்பற்றி பேசாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இவை இரண்டும் விலையில் இரட்டை சதம் அடித்து ரூ.200-ஐ தாண்டியதால் அனைவரும் கிலியடைந்தனர். இதேபோல் பச்சை மிளகாய், இஞ்சி உள்ளிட்ட இன்னும் சில காய்கறிகளின் விலையும் அதிகமாக இருந்தது. இப்படிப்பட்ட நிலையில் கடந்த ஒரு வாரமாக காய்கறிகளின் விலை பெருமளவு குறைந்து விட்டது. ஆனால் தற்போது மளிகைப்பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இது குறித்து மளிகை வியாபாரிகள் கூறியதாவது:-
கடந்த மாதம் ஒரு கிலோ சீரகம் ரூ.950-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் 60 ரூபாய் அதிகரித்து தற்போது ரூ.1010-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் மற்ற மளிகை மற்றும் எண்ணெய் வகைகளின் விலை விவரம்(பழைய விலை அடைப்பு குறிக்குள்)வருமாறு:-
துவரம்பருப்பு ரூ.175 முதல் ரூ.190(ரூ.160), உளுந்து ரூ.140(ரூ.128), கடலை பருப்பு ரூ.110(ரூ.105), பாசிபருப்பு ரூ.135(ரூ.125), வெள்ளை கொண்டை கடலை ரூ.200(ரூ.190), கருப்பு சுண்டல் ரூ.140(ரூ.120), சர்க்கரை ரூ.44(ரூ.40), மிளகு ரூ.850(ரூ.810), வத்தல் ரூ.330(ரூ.300), மல்லி ரூ.230(ரூ.190), நல்லெண்ெணய் லிட்டர் ரூ.450(ரூ.420), தேங்காய் எண்ெணய் ரூ.180(ரூ.170), கடலை எண்ணெய் ரூ.220(ரூ.200) ஆகிய விலைகளிலும் அரிசி ஒரு சிப்பத்திற்கு தலா ரூ.100 வரைக்கும் அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஆறுதல் தரும் காய்கறி
திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் காய்கறிகளின் விலை குறித்து கூறியதாவது:-
தக்காளி கிலோ ரூ.15 முதல் ரூ.20, சின்ன வெங்காயம் ரூ.40 முதல் ரூ.60, பெரிய வெங்காயம் ரூ.35, வெண்டை ரூ.30, அவரை ரூ.30, புடலை ரூ.30, பீர்க்கங்காய் ரூ.40, முட்டைகோஸ் ரூ.30, பீன்ஸ் ரூ.60, கேரட் ரூ.70, ஊட்டி பீட்ரூட் ரூ.60, சாதா ரூ.30, மேரைக்காய் ரூ.30, கொத்தவரங்காய் ரூ.40, ஊட்டி உருளை ரூ.70, சாதா ரூ.40, பவானி கத்தரி ரூ.60, வரி கத்தரி ரூ.30, சுரைக்காய் ரூ.30, முருங்கை ரூ.20, அரசாணிக்காய் ரூ.15, பூசணிக்காய் ரூ.20, சேனை ரூ.50, பலாக்காடு சேனை ரூ.70, கருணைகிழங்கு ரூ.60, இஞ்சி புதிது ரூ.100, பழையது ரூ.260, புதினா கட்டு ரூ.7, மல்லி ரூ.10, கருவேப்பிலை கிலோ ரூ.40, கீரை வகை ரூ.7
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.