அரியலூரில் வாகன சோதனை: 7 ஆட்டோக்கள் பறிமுதல்


அரியலூரில் வாகன சோதனை: 7 ஆட்டோக்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 21 July 2023 12:24 AM IST (Updated: 21 July 2023 12:38 PM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் நடைபெற்ற வாகன சோதனையில் 7 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகர், வாகன ஆய்வாளர் சரவணபவன் ஆகியோர் அரியலூர் நகரில் பல்வேறு இடங்களில் வாகன சோதனை செய்தனர். அப்போது ஓட்டுனர் உரிமம் மற்றும் தகுதி சான்று உள்பட எந்த ஆவணங்களும் இன்றி 7 ஆட்டோக்கள் இயக்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, 7 ஆட்டோக்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த ஆட்டோ உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோன்று நகரில் தொடர்ந்து வாகன சோதனை நடத்தப்படும் எனவும், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி செல்லும் ஆட்டோ டிரைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story