பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வாகன சோதனை தீவிரம்


பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வாகன சோதனை தீவிரம்
x

தமிழக-கேரள எல்லையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்

வால்பாறை

தமிழக-கேரள எல்லையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மானாம்பள்ளி மற்றும் வால்பாறை வனச்சரக பகுதியில் அமைந்துள்ள வால்பாறை தாலூக்கா பகுதி முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வனத்துறையின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர் உத்தரவின் பேரிலும், துணை கள இயக்குனர் வழிகாட்டுதலின்பேரிலும் ஆழியாறு, அட்டகட்டி வழியாக மற்றும் கேரள மாநிலம் மளுக்கப்பாறை வழியாக வால்பாறை பகுதிக்குள் வரக்கூடிய அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படுகிறது. அதில் கொண்டு வரப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

மளுக்கப்பாறை சோதனைச்சாவடி

இது தவிர மானாம்பள்ளி வனச்சரக பகுதிக்கு உட்பட்ட தமிழக-கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள மளுக்கப்பாறை வனத்துறையின் சோதனைச்சாவடியில் வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது. அப்போது பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, அதற்கு பதிலாக மஞ்சப்பை வழங்கப்பட்டது. தினமும் பறிமுதல் செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் அளவை கணக்கிட்டு பதிவு செய்யும் பணியையும் வனத்துறையினர் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பைகளை கொண்டு வர வேண்டாம். பல்வேறு வியாபார பொருட்களை கொண்டு வரக்கூடிய வியாபாரிகளும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

----------------------


Next Story