குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள் ரூ.15 லட்சத்திற்கு ஏலம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள் ரூ.15 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் விபத்து மற்றும் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட ஆட்டோ, கார், இருசக்கர வாகனங்கள் உள்பட 95 வாகனங்கள் நேற்று ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் பங்கேற்றவர்களிடம் ரூ.15,000 முன்தொகை பெறப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்று ஏலத்தில் பங்கேற்றவர்கள் 88 இருசக்கர வாகனங்கள், 3 கார்கள், மற்றும் 3 ஆட்டோக்களை ஏலம் எடுத்தனர். ஜி.எஸ்.டி. சேர்த்து மொத்தம் ரூ.15 லட்சத்திற்கு வாகனங்கள் ஏலம் போனது. வாகனங்களை ஏலம் எடுத்தவர்களுக்கு உரிய சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story